வீணன் வீணை

கல்வி தெய்வம் கலைவானியின் பயிற்சியகத்திலே 10 ஆண்டு காலம் வீணை பயின்று வந்தும் அறவே சுரம் கொண்டு வாசிக்க இயலாத வீணன் அங்கிருந்து விலகி இன்று இந்த நதியின் ஓரம் நின்றான்.

‘நில்’ எனும் குரல் கேட்டு திரும்பி கலைவானியைக் கண்டான்.

அவளுக்கு அந்நாள் நினைவு வந்தது. கண்களின் ஓரம் நீர் சொரிய சிவந்த கண்களுடன் அவள் முன் நின்றிருந்தான் அந்நாள். அவன் இயலாமயில் அழுகிறான் என பிற மாணவர் நினைத்தனர். அவள் உண்மை அறிந்திருந்தாள். அவர் அவர் ஆர்வதிற்க்கும் முயற்சிக்கும் ஏற்ப திறமை தந்தாள். சிலர் கவனம் மதில் மீதுள்ள பல்லி மீது அது பின் திரும்பி விடும் அவள் பொருள் மீது. ஆனால் இவன் மனசுவரில் பல பல்லி பல திக்கில் ஓடின. இவளும் அதை ரசித்து அவன் போக்கில் விட்டாள்.

அவன் கண்ணில் இருந்தது அழுகயல்ல கோவம் என்பதனை அறிந்திருந்தாள். பலர் கோபத்தில் வீணை எறிந்து இனி இசய்திலேன் என முடிவெடுப்பர். இவனோ எக்கை பட்டாலும் தேவ கானம் இசைக்கும் இசை கருவி படைப்பேன் என கோபத்திலும் குழந்தை போன்று கற்பனை ஆசயுடன் நின்றான்.

மனதில் இவ்வளவு உள்ள போதும் அவன் கூற நினைத்தது அவளுக்கு ஆச்சரியம் அளித்தது. தன்னை குறை கூறாமல் மாறாக தான் குற்ற உணர்வு கொள்ள கூடாது என்பதற்காக நீங்கள் நன்கு பயிற்றுவித்தீர்கள் ஆனால் எனக்கு போதுமான அளவு கற்ருவிட்டேன் என கூறி கிளம்ப எண்ணினான். அவன் மனம் நினைத்தும் வாய் குளறிற்ரு உள்ள பெருக்கினிலே. அவன் கொண்ட அவா வேறு யாருக்கும் இலை இருப்பினும் ஏன் என குமிறியது. பேசாமல் தலை அசைத்து சென்று விட்டான்.

அடுத்த நாள் தச்சு பயிற்சி கூடத்தில் அவனை பார்த்த போது அவளுக்கு அதிர்ச்சி இல்லை. ஆய கலைகள் அறுபத்தி நான்கு வகைகளே தவிர உலகில் யாவும் ஓர் கலை தான். சமயல் முதல் பிறர் உண்மை உணர்தல் வரை யாவும் ஓர் கலை. இசை கருவி படைக்க இங்கு வருவான் என அவள் உணர்ந்தாள். ஆனால் இசையை விட புது இசை கருவி படைப்பது எவ்வளவு கடினம், அதற்கு இன்னும் அதிக இசை உணர்வும் அறிவும் தேவை என்பதை எப்படி வைராக்கிய உளம் தனில் புரிய வைப்பது. வழி இல்லை இங்கும் பயின்று இங்கும் தோல்வி கண்டு புரிதலே அவன் கதி. தாங்குமா அந்த கோர தோற்றத்தின் உள்ளிருக்கும் பிஞ்சு உளம்.

அவன் ஆனால் அதிர்ச்சி அடைந்தான் அவளை அங்கு கண்டு. தலை குலுக்கி விட்டு திரும்பி சென்றான். அவள் அவன் எண்ணம் அறிவாள். கோபம் இல்லை மாறாக இவளுக்கு அப்படி ஒரு கருவி படைக்க தெரிந்திருந்தால் இவள் ஏன் அதை விடுத்து கடினமான வீணை கொண்டு பயிற்சி தருவாள் என்று நினைத்து நகர துவங்கினான்.

அப்போதும் இப்போது போல ‘நில்’ என கூப்பிட்டாள்.

அவள் கூப்பிட காரணம் இருந்தது. பயிற்சி கூடத்திலே நிலை கொள்ளா இவன் பிரபஞ்சத்தில் எத்துணை சக்திகள்  தவிடுபொடிஆகும் இவன் உளம். வேரோடு இவன் கற்பனை உலகிலிருந்து உண்மைக்கு வரவைக்கவேண்டும். இங்கு முடிப்பேன் அவன் கற்பனை பயணத்தை.

‘உன் அவா உண்மை ஆனால் உன் கவனமும், உழைப்பும் அதிலும் மேலாக உன் அகமும் உன்னை பற்றி உள செருக்கும் தவறு.’

அவன் எண்ணம் கேட்டது – ‘சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.’

உண்மை யாதெனின் அனைவரும் அறிவாக திறனாக ஆக்கி அன்பும் பண்பும் சேர்த்து எடுத்து மகிழ்ச்சி காண நான் மட்டும் அல்ல இவ்வுலகின் அனைத்து சக்திகளும் வழி செய்கிறோம். அவரவர் எண்ணம் போல் குடும்பம், உறவு, நட்பு, தொண்டு, படைப்பு, ரசனை, என பல கோணங்கள் கொண்டு அல்ல ஒரு கோணம் வெற்றி காண பல தடைகள் கண்டு வாழ்கின்றனர் மனிதர்கள். அனைவரும் சமானம். குழந்தைக்கு மன் சாப்பிடாதே என்பதன் காரணம் கூற முடியுமோ. சாப்பிடாதே என ஆணை இட அது கேட்கும்.

அது போல் ‘ அதை எழுதியவன் அறிவுள்ள மகாகவி. நீ அறிவற்ற திறன் அற்ற பித்து கொண்ட முட்டாள். உன் சுரம் யாவும் அபசுரமே.’ என்றேன்.

அவன் குமுறுவான் எதிர்பான் மெல்ல புரிய செய்யலாம் என்று எண்ணினேன். மாறாக அவன் மனம் என் கூற்றை அப்படியே ஏற்றது. தான் உன்மயில் திறன் இல்லாதவன் மட்டும் அல்ல வீணாய் பல கற்பனை செய்து அதை பகிர்ந்து கேவலமானெனே என துடித்தான். தன்னை போல் வீண் வீணனுக்கும் இவ்வுலகில் இடமுண்டோ என நினைக்க நான் பொறுமை காத்தேன். இவன்இதுவன்று.

புன்னகைத்து திரும்பி நடந்தான், அவன் எண்ணம் ஒலித்தது ‘வல்லமை வேண்டாமே யாருக்கும் தீதின்றி வாழ்வதற்கே, சொல்லடி சிவசக்தி நில சுமயெந வாழ்வதில் தவருளதோ’ என நகர்ந்தான்.

பின் வருடங்கள் பல ஓடி வெற்ரென வாழ்ந்து முடிவான் என நினைக்க, எங்கிருந்தோ பொதிந்த எண்ணத்தை தூசு தட்டி, ஒரு தலை அவன் அறிவிர்கு கானதென பத்து தலை கொண்டு ருதிரவீனை படைத்த ராவணனை கண்டு ஞானம் திறன் பெற்று, ராவணன் அறிவின் பாதை அழிவு தரும் அன்பின் பாதை மகிழ்வு தரும் என கூறியும் பொருட்படுத்தாமல் ஆயிரம் தலை ராவணனை தேடி கண்டு வித்தை பல கற்று, இன்று அக்கறை உள பொக்கிஷா பொருள் எடுத்து வீணன் வீணை செய்து முடிக்க நின்றான்.

‘நில், நீ அக்கறை போனால் என் வீணை பாழாகும்.’

வீணன் நேராக பேசினான் ‘உன் வீணை பற்றி மட்டும் கவலை என்ன’

‘ஆம் நீ போனால் என் கயில் உள வீணை அழியாது, நான் கூறியது என் கண் முன், ஆற்றின் முன், அபசுரமானாலும் எனது சுராமான அந்த வீணை நீ பாழாய் போவாய். அக்கரைஇல் புகழ் காண்பாய் இக்கரைஇல் அன்பும் மகிழ்வும் காண்பாய்.’ என கூறி முடிக்கும் முன்னரே அவன் ஆற்றில் இறங்கி விட்டான்.

இனி அவன் இக்கரை திரும்ப முடியதென தெரிந்து போனது. அவன் ஏதோ முணுமுணுத்து கொண்டே போனான். காதில் கேட்காவிடிலும் எண்ணத்தில் ஒலித்த அந்த அபசுரம் கீழே. அதை கூறவே இவ்வளவு சூடிகயும். இதோ அந்த அபசுரம் கொண்ட முணுமுணுப்பு.  இதை நடந்த உண்மை முடிவென்று கொண்டாலும் சரி அல்லது அவன் முணுமுணுப்பென்று கொண்டாலும் சரி இதோ அது.

“உலகை ஆழும் சுரம் படைக்க

எதிர் கரயை நோக்கி இவன் நடக்க

கனத்த நெஞ்சுடன் தேவர்களும்

இந்திரனும் சந்திரனும்

தடுப்பதென்று கை அசைக்க

இடிமின்னல் மழை வான் பெயர்த்து

ஆற்றில் வெள்ளம் கூட்டி விட

நடுவினிலே தத்தலிததான்

 

இவனிலும் அன்பு கண்ட தேவர் மைந்தன்

மெதுவாக முகம் திருப்ப

சர்ப்பத்தின் கட்டவிழ்ந்ததுவே

அதன் வாலை பற்றி கொண்டு

வெள்ளத்திலும் இவன் மிதந்தான்

மனிதர் பலர் பதபத்க்க

மேலவனும் முகம் சுழிக்க்க

பாம்பதுவும் கை விலகியது

 

தனி ஒருவன் வேற்றுமை பால்

உலகமது தனிமைத்னில் இவனை தள்ள

மாற்று உள்ளம் தனை உணர்ந்த

தேவதூதன் குரல் எழுப்ப

எதிர் திசயோடு புது வெள்ளம்

நீர் மாலயாய் உயர்ந்து நின்று

அதன் நடுவே இவனும் நின்றான்

 

உலகம் ரெண்டு பட்டதுமே

குழப்பம் பேயென ஆடியது

குழந்தை பல அழ கேட்டு

இவன் தடுமாறி ஆற்றில் வீழ்ந்தான்

 

இதோடு முடிந்ததென்று தேவர்கள் கைவிட்டு

அரக்கர்களும் கைவிட்டு பின்

மனித தர்மம் சீறி எழ

இவன் நீச்சல் கற்ருவிட்டான்

 

உண்மை தர்மம் எதுவென

அற்ப்பபர்களும் குலுகுலுக்க

பக்தர்களும் முணுமுணுக்க

நீச்சல் இவன் மறந்திட்டான்

 

முடிவு தனை உணர்ந்த இவன்

ஓசயின்றி கண் மூடி

மெதுவாக புன்னகைத்தான்

உலகமது விலக்கியுமே அன்பொடு மூடிய கண்

உலகழிக்க வல்லதென உணர்ந்த வெள்ளம் விலகியது

 

மறு கரை நோக்கி நகர்ந்தவன்

மீண்டும் கண் மூடி கொண்டான்

உண்மை ஞானம் விலக்கிவிட்டு

கண்கள் நடுவில் அன்பு துளிர்திற்று

உறவு கரை நீங்கிற்று

ஆசை கரை வேண்டாமென

ஆற்றின் நடுவில் பயணித்தான்

 

உலகமது பற்று கொண்டு

அன்பை சிறு வட்டத்தில் சுருகிற்று

இவனை கொஞ்சம் மறந்திற்று

தான் அன்பு காட்ட வழி இன்றி

பண்பயாவது காத்து நிற்க

மூழ்கி இவன் கடல் சேர்ந்தான்.”

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s