பொறி

எதிரிகள் என யாருமில்லை
இருந்தால் அனைவரும் தான்
நண்பர்கள் என யாரும் இல்லை
இருந்தால் அனைவரும் தான்
உறவுகள் என யாருமில்லை
சாகவில்லை சலித்து விட்டனர்
நத்தை மீது பாசம்
எத்தனை கால காத்திருப்பு
சுய நலம் கொண்டவனை மன்னீக்கலாம்
எப்படியும் தனியாக பிழைத்திடுவான்
சுய நலம் கொண்டு சுய நலன் அறியாத
மூடன் என்னை என் செய்வார்

சக பயணிகள் கூட இல்லை
பயணம் என்றால் பாதயுண்டு இலக்குமுண்டு
வழிபோக்கன் எனக்கு பாதை இல்லை
ஆனால் எனக்கும் கூட இலக்கு உண்டு
எதிரி என இருந்திருந்தால்
அவனை வென்று இலக்கு கிட்டும்
நண்பன் என இருந்திருந்தால்
அவனை கொண்டு இலக்கு கிட்டும்
திறமை என இருந்திருந்தால்
யாதும் இன்றி இலக்கு கிட்டும்
ஒன்றும் இல்லை என்தனிடம்
என்ன செய்து இலக்கை எட்ட

இலக்குமது வித்தியாசம்
நன்மை இல்லை தீமை இல்லை
தொடுவானம் தன்னில் எந்தன் இலக்கு
எவன் எவனோ வகுத்த வட்டத்தில்
குடும்பம் என்றும் குழந்தை என்றும்
மகிழ்ந்து நின்ற போதினிலும்
புரியாத என்னை கண்டு
கொக்கரிக்கும் பேதைகளை
கவிழ்ப்ப்து எந்தன் இலக்கு அல்ல

மாறுபட்டு அவர்களுக்கும்
நன்மை செய்ய விரும்பி நின்றேன்
அரசாழும் பருந்துகளும்
கொடுமை செய்யும் பணத்தவரும்
தவறுகளை விடுத்து நின்று
அவர் கொட்டத்தை அடக்கிடுவேன்
இதிலும் விட முக்கியமாய்
பிஞ்சுகளின் நெஞ்சத்தில்
படி இல்லை அடி
எனும் பாவம் பெற்றோர்

அவர் பிழை பொறுத்தாலும்
வேலை பணம் மட்டும் முக்கியம்
எனும் மூடர்களும் விட்டு விட்டு
இவை அனைத்தின் காரணமாம்
கோடி போட்டி உலகத்தின்
வேகத்தை குறைத்திடுவேன்

எப்படி என குழம்பி நின்றேன்
சீ குவேறா மந்திரத்தை
நான்கு முறை சொல்லி வந்தேன்
வெறி கொண்டு பொறி தட்டியது
புரட்சி ஒன்றே முடிவு என்று
அதற்கு தேவை காவு ஒன்று
அரசாழும் அறக்கர்களின்
இயந்திரத்தை உலுப்பி விட்டு

துணிந்த நெஞ்சம் இங்கே என
தோட்டாக்கள் எங்கே என்பேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s